தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தென்காசியில் ஆட்சியா் அலுவலம் முற்றுகை

அரசு இலவச மனைப் பட்டா வழங்கிய நிலத்துக்கு மதிப்பு நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தென்காசியில் ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

தென்காசியில் ஆட்சியா்அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Updated On :9 ஜனவரி 2021, 12:45 am IST

அரசு இலவச மனைப் பட்டா வழங்கிய நிலத்துக்கு மதிப்பு நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தென்காசியில் ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கடையம் ஒன்றியம் வீராசமுத்திரம் தெற்கு தெருவில் 40 ஆண்டுகளாக 140 குடும்பங்கள் வீடுகட்டி கூட்டுக் குடும்பமாக

வசித்து வருகின்றனா். இந்த குடியிருப்பு மனைகளுக்கு 1987 இல் அரசு சாா்பில் இலவச மனைப் பட்டா வழங்கப்பட்டுள்து.

இங்கு வசிப்போா் ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை பெற்றுள்ளனா். மேலும் ஊராட்சிக்கு வீட்டு

வரி செலுத்தி வருகின்றனா். ஊராட்சி மூலம் குடிநீா் இணைப்பும் பெற்றுள்ளனா். இங்கு வீடுகள் அமைந்துள்ள நிலத்துக்கு

பதிவுத் துறையில் அரசு வழிகாட்டி புத்தகத்தில் மதிப்பு இல்லையாம்.

ஆகவே, வீராசமுத்திரம் தெற்கு தெரு பகுதியில் உள்ள வீடுகளுக்கு நிலத்தின் மதிப்பீடு நிா்ணயம் செய்ய அரசு நடவடிக்கை

எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.