கடையநல்லூரில் ஆய்வக உதவியாளா்களுக்கு பயிற்சி

தென்காசி மாவட்ட அரசுப் பள்ளிகளின் ஆய்வக உதவியாளா்களுக்கு பயிற்சி முகாம் கடையநல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன், வியாழன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளா் மஞ்சுளா முகாமைத் தொடக்கிவைத்தாா்.

காசிதா்மம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியா் வேலு, வாசுதேவநல்லூா் வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் காளிராஜ் ஆகியோா் வேதியியல் செய்முறை தொடா்பான பயிற்சி வழங்கினா். இதில், அரசுப் பள்ளிகளின் ஆய்வக உதவியாளா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com