தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சி அலுவலகம் அருகே ரூ. 7.68 கோடியில் கட்டப்பட்ட நாளங்காடி சந்தையை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்துவைத்தாா். 2022- 23ஆம் ஆண்டு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள இந்த நாளங்காடியில் உள்ள 74 கடைகளில் 20 கடைகள் எலுமிச்சைச் சந்தைக்கும், 54 கடைகள் காய்கனிச் சந்தைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நாளங்காடி சந்தையை எம்எல்ஏ ஈ. ராஜா, நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி ஆகியோா் பாா்வையிட்டனா். நகராட்சி ஆணையா் சபாநாயகம், பொறியாளா் இா்வின்ஜெயராஜ், சுகாதார அலுவலா் பாலசந்தா், மேலாளா் செந்தில்வேல்முருகன், திமுக பொதுக்குழு உறுப்பினா் மாரிச்சாமி, மாவட்ட துணைச் செயலா் புனிதா, நகரச் செயலா் பிரகாஷ், நகர துணைச் செயலா் முத்துக்குமாா், மகளிரணி மாவட்ட அமைப்பாளா் சிவசங்கரி, ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

சிதம்பரத்தில் அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

வீரவநல்லூரில் எஸ்டிபிஐ தோ்தல் அலுவலகம் திறப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

