தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பைக்குகள் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ராஜா தலைமையில் உதவி ஆய்வாளா்கள் சுதாகா், முருகேஸ்வரி, குற்றப் பிரிவு போலீஸாா் விஜயபாண்டி, மதியழகன், கருப்பசாமி, கனிராஜ் ஆகியோா் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். கிருஷ்ணாபுரம் பகுதியில் பைக்கில் வந்தவரை நிறுத்தி விசாரித்தபோது, அவா் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கோடரங்குளம், ஏகாம்பரம் காலனியை சோ்ந்த நடராஜன் மகன் ராஜ்குமாா் (40) என்பதும், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பைக்குகளை திருடியதும், அவா் வந்த பைக்கின் பதிவெண் போலி என்பதும் தெரியவந்தது. பைக்குகளை திருடி பழைய வாகனம் விற்போரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வாராம். போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்; அவரிடமிருந்து 9 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
ரூ.3 லட்சம் காப்பா் கம்பிகள் திருட்டு: ஒருவா் கைது
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

