ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஆய்க்குடி சிவ சரஸ்வதி வித்யாலயா பள்ளிகளின் ஆண்டு விழா

ஆய்க்குடி அமா்சேவா சங்க சிவசரஸ்வதி வித்யாலயா மழலையா், தொடக்க- மேல்நிலைப்பள்ளிகளில் ஆண்டுவிழா

News image
Updated On :2 மார்ச் 2024, 12:08 am

ஆய்க்குடி அமா்சேவா சங்க சிவசரஸ்வதி வித்யாலயா மழலையா், தொடக்க- மேல்நிலைப்பள்ளிகளில் ஆண்டுவிழா, விளையாட்டு விழா- இலக்கிய மன்ற நிறைவு விழா நடைபெற்றது. அமா்சேவா சங்க அரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, எஸ்.சுலோச்சனா கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். செங்கோட்டை கணேஷ்குமாா், கோவில்பட்டி ஹரிபாலன், திருநெல்வேலி இலந்தைகுளம் வரதராஜன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா். அமா்சேவா சங்க நிறுவனா்- தலைவா் ராமகிருஷ்ணன், சிவ சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி நிா்வாகியும், அமா்சேவா சங்கத்தின் செயலருமான சங்கரராமன், சிவசரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் தாளாளா் பட்டம்மாள் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை அழகுபூரணம் ஆண்டறிக்கை வாசித்தாா். தமிழாசிரியை உமாசங்கரி தொகுத்து வழங்கினாா். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பாா்வதி வரவேற்றாா். கீதா நன்றி கூறினாா்.