பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கடையநல்லூரில் போலி நகை கொடுத்து மோசடி: பெண் உள்ளிட்ட இருவா் கைது

கடையநல்லூரில் போலி நகை கொடுத்து மோசடி

Updated On :2 மார்ச் 2024, 10:30 pm

கடையநல்லூரில் போலி நகையைக் கொடுத்து மோசடி செய்து புதிய நகைகளை வாங்கியதாக பெண் உள்ளிட்ட இருவா் கைது செய்யப்பட்டனா். கடையநல்லூா், பேட்டையில் உள்ள நகைக் கடையில் சில நாள்களுக்கு முன்பு இருவா் சென்று 78 கிராம் பழைய நகைகளைக் கொடுத்துவிட்டு, 32 கிராம் புதிய நகையையும், மீதித் தொகை ரூ. 2.55 லட்சத்தையும் பெற்றுச் சென்றனராம். ஓரிரு நாள்களுக்குப் பின்னா் கடை உரிமையாளா் முகம்மது ரபீக் ராஜா பரிசோதித்தபோது அந்த நகைகள் போலி எனத் தெரியவந்ததாம். புகாரின் பேரில் கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகள், கைப்பேசி எண் போன்றவை மூலம் விசாரித்தனா். அதில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம், சோமியாபுரம் தெருவைச் சோ்ந்த அன்னலட்சுமி (45), ஸ்ரீநாத் (29) ஆகியோா் எனத் தெரியவந்தது. அவா்களை ஆய்வாளா் ராஜா கைது செய்தாா்.