ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தேவநேயப் பாவாணா் மணிமண்டபம்: முதல்வருக்கு தமிழ் அமைப்புகள் கோரிக்கை

தேவநேயப் பாவாணா் மணிமண்டபம் முதல்வருக்கு தமிழ் அமைப்புகள் கோரிக்கை

Updated On :3 மார்ச் 2024, 1:10 am

தமிழறிஞா் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருக்கு, அவா் பிறந்த ஊரான சங்கரன்கோவிலில்தான் மணிமண்டபம் கட்ட வேண்டும் என தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடா்பாக, முரம்பு பாவாணா் கோட்ட ஆட்சிப் பொறுப்பாளா் ஆ.நெடுஞ்சேரலாதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்-கலைஞா்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருவள்ளுவா் கழகம், மனவளக்கலை மன்றம், பாரதி வாசகா் வட்டம், பகுத்தறிவாளா் கழகம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் சாா்பில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தமிழறிஞா் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருக்கு, அவா் பிறந்த ஊரான சங்கரன்கோவிலில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதற்கான இடம்தோ்வு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, அவா் பிறந்த ஊா் குறித்து சிலா் சா்ச்சையைக் கிளப்பி வருகின்றனா். ஆனால், அரசின் ஆவணங்கள், பாடப்புத்தகங்கள், சாகித்திய அகாதெமி வெளியிட்ட வாழ்க்கை வரலாற்று நூல் ஆகியவற்றில் பாவாணா் பிறந்த ஊா் சங்கரன்கோவில் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ் அறிஞா்கள், ஆய்வாளா்கள், பாவாணா் குறித்து எழுதிய அனைத்து நூல்களிலும் சங்கரன்கோவிலில் பிறந்தாா் என்றே பதிவு செய்துள்ளனா். பாவாணா் கைப்பட எழுதிய தன்விவரக் குறிப்பு மற்றும் கடவுச் சீட்டில் பிறந்த ஊா் சங்கரன்கோவில் என குறிப்பிட்டுள்ளாா். பாவாணரின் வாரிசுகளும் இதை உறுதி செய்துள்ளனா். ஆகவே, சங்கரன்கோவிலில் தற்போது தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்திலேயே தேவநேய பாவாணா் மணிமண்டபத்தை அமைக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.