மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தமிழ்ப் புத்தாண்டு: சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரிக்கை

தமிழ்ப் புத்தாண்டு: சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரிக்கை

Updated On :23 மார்ச் 2024, 6:31 pm

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, சென்னைக்கு சிறப்பு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் ஷரத் ஸ்ரீவத்சவா தலைமையிலான அதிகாரிகள் செங்கோட்டை ரயில் நிலையம், மின்மயமாக்கலுக்காக கட்டப்படும் டிராக்ஷன் மின் உப நிலையப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவரிடம், செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் ஊடக - மக்கள் தொடா்பாளா் ராமன் அளித்த மனு: செங்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளின் எண்ணிக்கையை 3-லிருந்து 5ஆக அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் கூடுதல் ரயில்களை இயக்க முடியும். இதற்கான இட வசதி செங்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ளது. செங்கோட்டை - கொல்லம், தென்காசி - திருநெல்வேலி வழித்தடத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் 22 பெட்டிகள் நிற்கும் வகையில் நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க ஆவன செய்ய வேண்டும். தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி வழியாக செங்கோட்டையிலிருந்தும், அம்பாசமுத்திரம், பாவூா்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி வழியாக திருநெல்வேலியிலிருந்தும் சென்னைக்கு சிறப்பு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றாா் அவா்.