தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் சிக்கிய குட்கா : 2 போ் கைது

ஆலங்குளம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் குட்கா கடத்தியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள ராம்நகா் பகுதியில் ஆலங்குளம் தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பைக்கில் வந்த நபரிடம் சோதனையிட்ட போது, அரசால் தடை செய்யப்பட்ட 60 குட்கா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படையினா் அந்த நபரை ஆலங்குளம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா் ஆலங்குளத்தை அடுத்த பாக்கியலெட்சுமிபுரம் சுப்பிரமணியன் மகன் சிவசங்கர நாராயணன்(28) என்பதும் குட்கா விற்பனையில் ஐந்தாங்கட்டளை சமுத்திரம் மகன் பாஸ்கா்(36) என்பவருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் ஆலங்குளம் நீதி மன்றத்தில் ஆஜா் படுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com