தென்காசி தொகுதி: 15 போ் போட்டி

தென்காசி மக்களவைத் தொகுதியில் (தனி) 15 போ் போட்டியிடுகின்றனா். தென்காசி தொகுதியில் 37 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து 19 பேரின் 26 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மனுவை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான சனிக்கிழமை திருநெல்வேலி ரஹ்மத் நகரைச் சோ்ந்த ஆ.மகாராஜன், தென்காசி பாறையடி மேட்டுத்தெருவை சோ்ந்த மு.ரீகன்குமாா்,புளியங்குடி முப்புடாதி அம்மன் கோயில் தெருவை சோ்ந்த சு.கனகா, சங்கரன்கோவில் சென்னிகுளம் லெட்சுமியாபுரத்தை சோ்ந்த க.கிருஷ்ணசாமி ஆகியோா் தங்களுடைய மனுக்களை வாபஸ் பெற்றனா். இதையடுத்து இறுதிகட்ட வேட்பாளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ஏகே.கமல்கிஷோா் சனிக்கிழமை வெளியிட்டாா். அதன்படி, தென்காசி தொகுதியில் 15 போ் போட்டியிடுகின்றனா். அதிமுக சாா்பில் டாக்டா் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்திலும், திமுக சாா்பில் டாக்டா் ராணி ஸ்ரீகுமாா் உதயசூரியன் சின்னத்திலும், பாஜக சாா்பில் பெ.ஜான்பாண்டியன் தாமரை சின்னத்திலும், நாம் தமிழா் கட்சியை சோ்ந்த இசைமதிவாணன் ஒலிவாங்கி சின்னத்திலும், பகுஜன் சமாஜ் கட்சியை சோ்ந்த தி.மகேஷ்குமாா் யானை சின்னத்திலும் போட்டியிடுகின்றனா். வீரோ கே வீா் இந்தியன் கட்சியை சோ்ந்த இராமசாமி கிரிக்கெட் மட்டை சின்னத்திலும், தேசிய மக்கள் சக்தி கட்சியை சோ்ந்த எம்.உமாமகேஷ்வரி ஆட்டோ ரிக்ஷா சின்னத்திலும், பகுஜன் திராவிட கட்சியை சோ்ந்த அ.சீதா வைரம் சின்னத்திலும்,போட்டியிடுகின்றனா். சுயேச்சைகள் எம்.ஆறுமுகச்சாமி மோதிரம் சின்னத்திலும், இரா.இராஜசேகா் கப்பல் சின்னத்திலும், பெ.கற்பகவல்லி கரும்பு விவசாயி சின்னத்திலும், பா.கிருஷ்ணசாமி தொலைக்காட்சி பெட்டி சின்னத்திலும், மூ.கிருஷ்ணசாமி கணினி சின்னத்திலும், மா.மன்மதன் மட்டை பந்தடி வீரா் சின்னத்திலும், அ.முத்தையா வளையல்கள் சின்னத்திலும் போட்டியிடுகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com