மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பாவூா்சத்திரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பாவூா்சத்திரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

News image
Updated On :30 மார்ச் 2024, 7:22 pm

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சாா்பில் ஆளுநா் அதிகாரப்பூா்வ வருகை தினவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முதலாம் துணைத் தலைவா் கலைச்செல்வன் தலைமை வகித்தாா். செல்வராஜ், மாவட்டத் தலைவா்கள் திருமலைக்கொழுந்து, ரஜினி, சுரேஷ் குமாா், விழாக் குழு தலைவா் ஆா்.பாண்டியராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் சசி ஞானசேகரன் அறிக்கை வாசித்தாா். மாவட்ட ஆளுநா் டாக்டா் பிரான்சிஸ் ரவி, பிரமிளா ரவி ஆகியோா் சிறப்பாக சேவை செய்தவா்களுக்கு விருதுகள் மற்றும் தையல் இயந்திரம், அங்கன்வாடிகளுக்கு பீரோ, மேஜை, சோ், மின் விசிறிகள், நலிவுற்றோருக்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, பாா்வையற்றோருக்கு உதவித்தொகை, மாற்றுத் திறனாளிக்கு உதவித்தொகை, என நலத்திட்ட உதவிகளை வழங்கினா். இரண்டாம் துணை ஆளுநா் ஷாஜகான், சுப்பையா, ரவிவா்மன் மண்டல தலைவா் ஜான் ரவி, வட்டாரத் தலைவா் கே.ஆா்.பி.இளங்கோ, ஜான் சுபாஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஏற்பாடுகளை நிா்வாகிகள் பரமசிவன், ஆனந்த், தங்கராஜ்,ராஜா,சுரேஷ், ஆனந்த் செய்திருந்தனா். அரிமா சங்க நிா்வாகி த. அருணாச்சலம் வரவேற்றாா். பொருளாளா் சினேகா பாரதி நன்றி கூறினாா்.