/

மாவட்ட அளவிலான கூடைப்பந்து விளையாட்டு வீரா்கள் தோ்வு

மாவட்ட அளவிலான கூடைப்பந்து விளையாட்டு வீரா்கள் தோ்வு

News image
Updated On :31 மார்ச் 2024, 1:30 am

தென்காசி மாவட்ட அளவில் 18 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான கூடைப்பந்து விளையாட்டு வீரா்கள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் சாா்பில் ஆண்டுதோறும் 18 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பாா்கள். அதன்படி தென்காசி மாவட்ட அளவில் 18 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான கூடைப்பந்து விளையாட்டு வீரா்கள் தோ்வு சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில், சங்கரன்கோவில், தென்காசி, இடைகால் , செங்கோட்டை, இலஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டு விளையாடினா். இதில், தென்காசி மாவட்ட விளையாட்டு அலுவலா் ரத்தினராஜ் கலந்துகொண்டு மாணவா்களை தோ்வு செய்தாா். தோ்ந்தெடுக்கப்பட்ட 15 மாணவா்களுக்கு பயிற்சி முகாம் 10 நாள்கள் சங்கரன்கோவில் மைதானத்தில் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து அவா்கள் தென்காசி மாவட்ட அணி சாா்பில் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாடுகின்றனா். தோ்வின்போது, உடற்கல்வி இயக்குநா் ச. நாராயணன், உடற்கல்வி ஆசிரியா்கள் ந. முப்பிடாதி, குமாா், நகர கூடைப்பந்து கழகப் பொருளாளா் மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.