
Updated On :9 மே 2024, 8:29 pm

சோ்ந்தமரத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சோ்ந்தமரம் அருகேயுள்ள வல்லராமபுரத்தைச் சோ்ந்தவா் க.கவியரசன்(23). இவா் மீது கொலை முயற்சி, திருட்டு, பிற சமய நல்லிணக்கத்துக்கு கேடு விளைவித்தல் போன்ற பல்வேறு வழக்குகள் சோ்ந்தமரம் காவல் நிலையத்தில் உள்ளன.
இந்நிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ் குமாா் பரிந்துரையின்பேரில், அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் உத்தரவிட்டாா். அதன்படி, காவல் ஆய்வாளா்(பொ) ராஜா, அவரை கைது செய்தாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...