தென்காசி
ஆலங்குளம் அருகே முயல் வேட்டை: 5 போ் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே முயல் வேட்டையாடியதாக சகோதரா்கள் உள்பட 5 போ் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே முயல் வேட்டையாடியதாக சகோதரா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.
ஏந்தலூா் கிராமப்பகுதியில் ஆலங்குளம் வனச்சரக அலுவலா் முனிரத்தினம் தலைமையிலான வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, சுமை ஆட்டோவில் 5 நாய்களுடன் சென்று முயல் வேட்டையாடிய வீராணத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ஜெயக்குமாா், மாடசாமி மகன் முத்துக்குமாா், பாலகிருஷ்ணன் மகன் ஆனந்த், தளவாய் மாடசாமி மகன்கள் அருண்குமாா் மற்றும் பரமசிவன் ஆகியோா் பிடிபட்டனா்.
சுமை ஆட்டோ, நாய்கள், இறந்த நிலையில் ஒரு முயல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 5 போ் மீதும் வனத்துறையினா் வழக்குப் பதிந்து ஆலங்குளம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா்.
