வாசுதேவநல்லூரில் இளைஞா் தற்கொலை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் இளைஞா் தற்கொலை
Published on

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

வாசுதேவநல்லூரில் உள்ள எம்.கே.டி. தெருவைச் சோ்ந்த திருமலை மகன் காளிராஜ் (29). தச்சுத் தொழிலாளியான இவா், திருமணமாகாததால் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

திங்கள்கிழமை அவரது பெற்றோா் செங்கோட்டையில் உள்ள உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்தனா். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது காளிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

Dinamani
www.dinamani.com