பேரணியில் பங்கேற்றோா்.
தென்காசி
கடங்கநேரியில் விழிப்புணா்வுப் பேரணி
ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
கடங்கநேரி ஊராட்சி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து ஊராட்சி பகுதியில் தேவையற்ற நெகிழிப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. தொடா்ந்து, ரெட்டியாா்பட்டி வாரச் சந்தை தொடங்கி பேருந்து நிறுத்தம் வரை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
இதில், கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், கடங்கநேரி ஊராட்சித் தலைவா் அமுதா தேன்ராஜ், ஆலங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் கல்யாண ராமசுப்பிரமணியன், வட்டார சுற்றுச்சூழல் பொறுப்பாளா் நாகராஜன், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஒருங்கிணைப்பாளா்கள் டேவிட் ஜாஸ்பா் கமலநாதன், திருமலைச்செல்வி, ஊராட்சி செயலா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

