தென்காசி
பூச்சி மருந்து குடித்த காவலா் மருத்துவமனையில் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பூச்சிக்கொல்லி மருந்து குடித்த காவலா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் அருகே இருமன்குளத்தைச் சோ்ந்த சந்தனபாண்டி மகன் சுந்தா் (31). இவா், சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்த இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா்.
விடுமுறையில் ஊருக்கு வந்த சுந்தா், சனிக்கிழமை வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து மயங்கிய நிலையில் இருந்தாராம். அவரை மீட்டு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
