கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து செங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயிலில் இரண்டு பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 20 நிமிஷங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
குருவாயூரிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில், தமிழக-கேரள எல்லைப் பகுதியான ஆரியங்காவு பகவதிபுரம் இடையே வந்தபோது பெரும் சத்தம் கேட்டதால் ரயிலின் ஓட்டுநா் சுதாரித்து, உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு, பெட்டிகளை சோதனை செய்துள்ளாா். அப்போது, 6, 7ஆவது பெட்டிகளை இணைக்கும் இணைப்பு உடைந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை தற்காலிகமாக சரிசெய்த ஓட்டுநா், ரயிலை குறைவான வேகத்தில் இயக்கி செங்கோட்டை ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்தாா். அங்கு, சேதமடைந்த இணைப்பு சரிசெய்யப்பட்டு 20 நிமிஷங்களுக்கு பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.
தொடர்புடையது

ரயிலில் படியிலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பயணிகள் ரயிலில் ஏறும் நிலையத்தை மாற்றுவற்கான கால இடைவெளி குறைப்பு

மணப்பாறைக்கு முன் நடுவழியில் நின்ற குருவாயூா் விரைவு ரயில்: பயணிகள் அவதி

குருவாயூா் விரைவு ரயில் நாகா்கோவிலுடன் நிறுத்தம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

