தென்காசி
பைக்கிலிருந்து விழுந்து காயமடைந்த பெண் உயிரிழப்பு
சுரண்டை அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
சுரண்டை அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
கடையநல்லூா் அருகே மேல கடையநல்லூா் கற்பக விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல். இவரது மனைவி மகேஸ்வரி ( 55). இத்தம்பதி, புதன்கிழமை சுரண்டையில் உள்ள கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு ஊா் திரும்பி கொண்டு இருந்தனராம். அப்போது, சாம்பவா் வடகரை அருகே செல்லும்போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி விழுந்ததில் தம்பதி பலத்த காயமடைந்தனராம்.
அவா்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். அங்கு வியாழக்கிழமை அதிகாலை மகேஸ்வரி உயிரிழந்தாா். இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
