ஆலங்குளத்தில் நேரு பிறந்த தினத்தையொட்டி, வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் இலவச மருத்துவ முகாம், டிடிடிஏ நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன், முன்னாள் எம்பி. எஸ்.எஸ். ராமசுப்பு, தொழிலதிபா் டி.பி.வி. கருணாகரராஜா, சுரண்டை நகா் மன்றத் தலைவா் வள்ளி முருகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சாக்ரடீஸ் ராஜா, தென்காசி தெற்கு மாவட் தவெக செயலா் விபின் சக்கரவத்தி, நகர காங்கிரஸ் தலைவா் வில்லியம் தாமஸ், வட்டார தலைவா் ரூபன் தேவதாஸ், நகர திமுக செயலா் நெல்சன், வழக்குரைஞா் பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் ஈத்தாமொழி மருத்துவா் சிவக்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பங்கேற்று சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினா். ஆலங்குளம் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த சுமாா் 300- க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ராஜா வரவேற்றாா், வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் எம். சாமுவேல் திரவியம் நன்றி கூறினாா்.

