பாவூா்சத்திரம் சுரங்கப்பாதையில் சிக்கிய பேருந்து: போக்குவரத்து பாதிப்பு
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் ரயில்வே சுரங்கப்பாதை வழியாகச் சென்ற ஐயப்ப பக்தா்களின் பேருந்து மழை நீா் தேங்கிய பகுதியில் பழுதாகி நின்ால் போக்குவரத்த்தில் பாதிப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தா்கள் சபரிமலைக்கு சென்றுவிட்டு, திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு செல்வதற்காக தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் வழியாக பேருந்தில் சென்று கொண்டிருந்தனா்.
அப்பேருந்து சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கி பழுதாகி நின்றுவிட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியா்கள் மின் மோட்டாா்கள் மூலம் சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து தென்காசியிலிருந்து திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையாக கடப்போகத்தி, மேலப்பாவூா், பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் வழியாக திருப்பிவிடப்பட்டன.
