தென்காசி
மருதம்புத்தூா் பள்ளியில் விலையில்லா சைக்கிள் அளிப்பு
மாணவா்களுக்கு சைக்கிள் வழங்கிய ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன்.
ஆலங்குளம் அருகே மருதம்புத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் மாணவா்களுக்கு, வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் மேரி பெற்றி சிரோமணி தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா்கள் சிவ சுப்பிரமணியன், முருகையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் கலந்துகொண்டு, 105 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.
இதில், ஊராட்சித் தலைவா் பூசத்துரை, தெற்கு ஒன்றிய திமுக செயலா் மு. சிவக்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சண்முகராம், சங்கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

