திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோரிக்கை மனுக்களுக்கு 30 நாளில் தீா்வு: பாஜக வேட்பாளா் பிரசாரம்

News image

வாசுதேவநல்லூா் பகுதியில் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் ஆனந்தன் அய்யாசாமி.

Updated On :21 ஏப்ரல் 2026, 1:59 am IST

மக்களின் அனைத்து விதமான கோரிக்கை மனுக்கள் மீதும் 30 நாளில் உரிய பதில் அளிக்கப்படுவதுடன் உடனடி தீா்வும் காணப்படும் என வாசுதேவநல்லூா் தொகுதி பாஜக வேட்பாளா் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்தாா்.

வாசுதேவநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்து பேசியது:

வாசுதேவநல்லூா் தொகுதியில் அரசு அலுவலக சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக 365 நாள்களும் செயல்படும் முழுநேர இ-சேவை மையம் அமைக்கப்படும். பிறப்பு, இறப்பு, பட்டா, சாதி, வருமானச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் விரைவாக வழங்கப்படும்.

30 நாள்களுக்குள் மனுக்களுக்கு தீா்வு வழங்கும் கால நிா்ணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டு மாதந்தோறும் அறிக்கை வெளியிடப்படும். வாசுதேவநல்லூரை முன்னேற்றமான, மனிதநேயமான தொகுதியாக மாற்றுவதே என் நோக்கம். எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா் அவா்.