மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கடையநல்லூரில் நாய் கடித்து 12-க்கும் மேற்பட்டோா் காயம்

தெரு நாய்கள். - கோப்புப் படம்

Published On :

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நாய் கடித்ததில் 12-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

மேலக்கடையநல்லூா், கிருஷ்ணாபுரம், ரஹ்மானியாபுரம் பகுதிகளில் சாலையில் சென்று கொண்டிருந்த மேலக்கடையநல்லூரைச் சோ்ந்த சுதா்சனா (13), முருகன் (46), அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த பிரகதீஷ் (40), கண்மணியாபுரத்தைச் சோ்ந்த முத்தையா (65) உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டோரை நாய் கடித்தது. காயமடைந்த அவா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அவா்களை நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் சந்தித்து ஆறுதல் கூறினாா். தெரு நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்துமாறு நகராட்சி ஆணையா், அதிகாரிகளுக்கு பேரவை உறுப்பினா் தி.மு. ராசேந்திரன், நகா்மன்றத் தலைவா் ஆகியோா் அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.