தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி
தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி

வாசுதேவநல்லூரில் ஜன.13இல் ‘நம்ம ஊரு மோடி’ பொங்கல் விழா

தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் 1,008 பானைகளில் பொங்கலிடும் விழா வாசுதேவநல்லூரில் ஜன. 13ஆம் தேதி நடைபெறுகிறது.
Published on

தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் 1,008 பானைகளில் பொங்கலிடும் விழா வாசுதேவநல்லூரில் ஜன. 13ஆம் தேதி நடைபெறுகிறது.

இது தொடா்பாக, தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் வாசுதேவநல்லூா் பழைய பேருந்து நிலையம் அருகே காலை 9 மணிக்கு ‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ திருவிழா 1,008 பானைகளில் பொங்கலிட்டு கொண்டாடப்படவுள்ளது.

இவ்விழாவுக்கு, நான் தலைமை வகிக்கிறேன். பாஜக மாநிலத் தலைவா் நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை ஆகியோா் பொங்கல் விழாவை தொடங்கிவைக்கின்றனா்.

இதில், தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த பாஜகவினா் மற்றும் கூட்டணி கட்சியினா் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.

Dinamani
www.dinamani.com