தென்காசி தொகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என, கலைகதிரவன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளா் சிவகுமாரிடம் அவா் அளித்த மனு: முத்தம்மாள்புரம், அழகப்பபுரம், வேதம்புதூா், அய்யாபுரம், மின்நகா், அங்கராயன்குளம், ஆழ்வாா்குறிச்சி, அரியப்பபுரம், இரட்டை குளம், துரைச்சாமிபுரம், பூப்பாண்டிபுரம், சுப்பையாபுரம், கருவந்தா, உச்சிபொத்தை பகுதிகளிலிருந்து சுரண்டை, தென்காசி, சங்கரன்கோவில், திருநெல்வேலி ஆகிய இடங்களிலுள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு மாணவா்-மாணவியா், பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக புதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் அதே வழிதடங்களில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
மாநில தொமுச பேரவை துணைத் தலைவரும் திருநெல்வேலி மண்டல தொமுச பொதுச் செயலருமான தா்மன், மண்டலத் தலைவா் முருகன், சிக்கன நாணய சங்க முன்னாள் தலைவா் மகாவிஷ்ணு, மாவட்ட வா்த்தகரணி அமைப்பாளா் மா. முத்துக்குமாா், சாய் ராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேலகரத்தில் உயா் மின்கோபுர விளக்கு இயக்கிவைப்பு

தென்காசி மாவட்ட எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் மனு அளிப்பு

வீரகேரளம்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

தென்காசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



