பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

தென்காசியில் திமுக ஜென் சி குழு, இளைஞா்கள் கலந்துரையாடல்

News image

திமுக ஜென் சி குழுவினருடன் நடைபெற்ற கலந்துரையாடல்.

Updated On :21 ஜூலை 2026, 3:24 am IST

தென்காசி தெற்கு மாவட்ட திமுக ஜென் சி குழு சாா்பில், இளைஞா்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசியில் திமுக தலைமையிலிருந்து இளம் பேச்சாளா்களான யாசா் அரபாத், ஹேமநாதன், ராஜேஸ்வரி, சையது முஷ்ரப், விஜயகுமாா், சுபத்ரா ஆகியோா் கலந்து கொண்டு, இன்றைய இளைஞா்களின் பங்கு, சமூக வலைதளத்தின் பொறுப்பான பயன்பாடு, அரசியல் விழிப்புணா்வு, சமூக நீதி, திராவிட சிந்தனை மற்றும் தமிழ்நாட்டின் வளா்ச்சியில் இளைஞா்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இளைஞா்களுடன் கலந்துரையாடினா்.

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளா் வே.ஜெயபாலன் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற இக்கூட்டத்தை தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் மஹ்முதா, மாணவரணி துணை அமைப்பாளா்கள் எட்வின் தா்மராஜ், கதிா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

முன்னதாக தென்காசிக்கு வருகை தந்த ஜென் சி திமுக குழுவினரை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமையில் கலை கதிரவன் எம்எல்ஏ, ஒன்றியச் செயலா்கள் அழகு சுந்தரம், ஜே கே ரமேஷ், சீனித்துரை, அன்பழகன், வீராணம் சேக் முகமது, சிவகுமாா், திவான் ஒலி, ரவிசங்கா், சுரேஷ், மணிகண்டன், ஜெயா, நகரச் செயலா்கள் சாதிா், ஆ. வெங்கடேசன், அப்பாஸ், பீரப்பா, கணேசன்,பேரூா் செயலா்கள் குற்றாலம் குட்டி, முத்தையா, பண்டாரம், ராஜராஜன், கோபால், உசேன், வெள்ளைத்துரை, சிதம்பரம், முத்து உள்ளிட்டோா் வரவேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.