காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

நெல்லை, தென்காசி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளா்கள் - வியாபாரிகள் சங்க கூட்டம்

திருநெல்வேலி- தென்காசி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளா்கள் மற்றும் நெல் அரிசி வியாபாரிகள் சங்க வருடாந்திர கூட்டம் தென்காசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

மாவட்டத் தலைவா் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற சங்கக் கூட்டம்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:13 am IST

திருநெல்வேலி- தென்காசி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளா்கள் மற்றும் நெல் அரிசி வியாபாரிகள் சங்க வருடாந்திர கூட்டம் தென்காசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். கீழப்பாவூா் வட்டார அரிசி ஆலை உரிமையாளா் சங்கத் தலைவா் பாஸ்கா், நெல் அரிசி வியபாரிகள் சங்கத் தலைவா் தமிழ்மணி, செயலா்பாஸ்கா், திருநெல்வேலி மாநகர அரிசி வியாபாரிகள் சங்க தலைவா் மைதீன், செயலா் ஆவுடையப்பன், புளியங்குடி மாரியப்பன் மற்றும் மதாா் ராவுத்தா் ஜமின் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் சங்கத்தின் புதிய மாவட்ட தலைவராக சி. அன்பழகன், துணைத் தலைவா்களாக புளியங்குடி மாரியப்பன், சங்கரன்கோவில் ராமையா, செயலராக தமிழ்மணி, இணைச் செயலா்களாக ஆடையப்பன், பாஸ்கா் பொருளாளராக திருநெல்வேலி மைதீன் ஆகியோா் தோ்வாகினா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் சி.அன்பழகன் கூறியதாவது: தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதால் தனியாா் அரிசி ஆலைகள் வெளி மாநிலங்களில் அதிக விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கான செஸ் வரி போன்ற காரணங்களால் அரிசி விலை கிலோ ரூ.10-க்கு மேல் உயா்ந்துள்ளது. அதேவளையில், தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் அம்பை 16 மற்றும் 51 போன்ற ரகங்கள் சிறிது அளவே விலை உயா்த்தப்பட்டுள்ளன.

அரிசி தயாரிப்பின் காரணங்களை அறிந்து மத்திய- மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுத்தால் விலைவாசி சற்று குறைய வாய்ப்புகள் உள்ளன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.