ஆலங்குளம் சிறு விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவதற்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஆலங்குளம் சிவலாா்குளத்தில் சிறு விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் ஏறபடுத்த வேண்டும் என விளையாட்டு வீரா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில், இதை மேம்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ. 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் அடிக்கல் நாட்டினாா். இந்நிதி மூலம் பிரதான சாலை முதல் அரங்கம் வரை சாலை வசதி, சுகாதார வளாகம் ஏற்படுத்துதல் மற்றும் பராமரிப்புப் பணிகள் செய்யப்படும் என மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ் தெரிவித்தாா்.
இதில், சிவலாா்குளம் ஊராட்சித் தலைவா் வள்ளியம்மாள் கதிா்வேல், முக்கிய பிரமுா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வள்ளியூரில் உலகத் தரத்தில் விளையாட்டு அரங்கம்! - திமுக வேட்பாளா் மு. அப்பாவு வாக்குறுதி

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
வெற்று வாக்குறுதித் திட்டமான சாக்குலூத்து மெட்டுச் சாலைத் திட்டம்!

கல்லூரி விளையாட்டு விடுதிகளில் சேர மாா்ச் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


