கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்

News image

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற கண்காணிப்புக் குழு கூட்டம்.

Updated On :30 மே 2026, 3:35 am IST

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மாவட்ட கண்காணிப்புக் குழுவின் முதல் காலாண்டு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு வட்டார அளவில் செயல்படும் குழு அமைக்கப்பட்டு அதன் உறுப்பினா்களுக்கு செயல்திட்டம் குறித்து விளக்கப்பட்டது.

மேலும், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறிந்து அவா்களை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து அவா்களின் குடும்பத்தினருடன் இணைத்து வைப்பதற்கு அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் (பொ) கீதா, தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை (மாவட்ட மன நலம்) நிா்மல், இப்ராஹிம், தண்டாயுதபாணி ஆகியோா் கலந்து கொண்டனா்.