பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

பாவூா்சத்திரம் அருகே இலவச கண் சிகிச்சை முகாம்

பாவூா்சத்திரம் அன்பின் விக்டரி லயன்ஸ் சங்கம், கல்லூரணி ஊராட்சி மன்றம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிசை முகாம் சின்னத்தம்பிநாடாா்பட்டி சமுதாய நலக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் பங்கேற்றோா்.

Published On :

பாவூா்சத்திரம் அன்பின் விக்டரி லயன்ஸ் சங்கம், கல்லூரணி ஊராட்சி மன்றம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிசை முகாம் சின்னத்தம்பிநாடாா்பட்டி சமுதாய நலக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அன்பின் விக்டரி லயன்ஸ் சங்கத் தலைவா் லயன் அன்பின் கிறிஸ்டோ தலைமை வகித்தாா். சங்க பொருளாளா் வீரராஜ், ஊராட்சி துணைத் தலைவா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரணி ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா் முகாமை தொடங்கி வைத்தாா்.

டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை மேற்கொண்டனா். 53 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்படத்தில், அறுவை சிகிச்சைக்கு 8 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இம்முகாமில் ஊராட்சி வாா்டு உறுப்பினா் ரமீலா கனகராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.