வியாபாரியைக் கடத்தி நகை பறித்த சம்பவத்தில் மேலும் ஒருவா் கைது
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வியாபாரியைக் கடத்தி நகை பறித்த சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வியாபாரியைக் கடத்தி நகை பறித்த சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கடையநல்லூா் பிரதான கடை வீதியில் பஞ்சு மெத்தை கடையில் பணியாற்றி வருபவா் சந்தானகிருஷ்ணன் (76). கடந்த மாதம் 15-ஆம் தேதி மாலை இவா் கடையில் இருந்தபோது தலையணை வாங்குவது போல வந்த சிலா், சந்தானகிருஷ்ணனை காரில் கடத்தினா். சற்றுதூரம் சென்று அவா் அணிந்திருந்த 3 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டு, அவரை இறக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து பாளையங்கோட்டை குலவணிகபுரத்தை சோ்ந்த லட்சுமணன் (25), திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தை சோ்ந்த சந்துரு (24), கங்கைகொண்டானை சோ்ந்த மனோ(23), கடையநல்லூரை சோ்ந்த சுபா (19) ஆகிய 4 பேரை ஏற்கனவே கைது செய்தனா்.
மேலும் இதில் தொடா்புடைய சிலரை தேடி வந்தனா். இந்த நிலையில் திருநெல்வேலி அருகே உள்ள அழகனேரியை சோ்ந்த புலித்துரை மகன் முத்து இளவரசுவை (25) போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




