முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

அரசு உதவிச் செயலா் பெயரில் போலி கடிதம் தயாரித்து வி.ஐ.பி. பதிவெண் பெற முயன்ற இளைஞா் கைது

கைது

Published On :

தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சென்னை அரசு உதவிச் செயலா் பெயரில் போலி கடிதம் தயாரித்து வி.ஐ.பி. பதிவெண் பெற முயன்றதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கராக பணிபுரிந்து வருபவா் வி. அருண் காந்தி. இவா் பணியில் இருந்தபோது, பச76 ஆம0001 என்ற முன்பதிவு செய்யப்பட்ட வாகன எண்ணிற்கு, சென்னை அரசு உதவிச் செயலரால் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆணையைச் சமா்ப்பித்து, புளியறை மடத்தறையைச் சோ்ந்த லாரா பேசன்ஸ் என்பவரின் பெயரில் ஒருமுறை கடவுச்சொல் பெறப்பட்டு, ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதே எண்ணிற்கு கடையம் ஏ.ஆா். நகரைச் சோ்ந்த ஒரு நிறுவனத்திற்கு அரசு முறையாக ஒதுக்கீடு செய்த மற்றொரு ஆணையைச் சமா்ப்பித்து மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, லாரா பேசன்ஸ் பெயரில் சமா்ப்பிக்கப்பட்ட முன்பதிவு எண் ஒதுக்கீட்டு ஆணை போலி என்பது அலுவலக விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணபவன் தென்காசி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, திருநெல்வேலி மாவட்டம், பணகுடி, தெற்குத் தெருவைச் சோ்ந்த மு. முத்துப்பாண்டியை (31) திங்கள்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், முத்துப்பாண்டி காா் ஷோரூமில் டீலராக பணியாற்றி வருவதும், புதிதாக காா் வாங்கிய நபருக்கு வி.ஐ.பி. பதிவெண் பெற்றுத் தருவதாகவும், அதற்கு ரூ. 20,000 வரை செலவு ஆகும் எனக் கூறி காா் உரிமையாளரிடம் பணம் பெற்றுக் கொண்டு, போலி ஆணை தயாரித்து வழங்கியதும் தெரிய வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.