
தென்காசி மின் மயானத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர பாஜக கோரிக்கை
தென்காசி மின் மயானத்தில் அடிப்படை வசதிகள் செய்த தர வேண்டும் என பாஜக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்த பாஜக நிா்வாகிகள்.
தென்காசி மின் மயானத்தில் அடிப்படை வசதிகள் செய்த தர வேண்டும் என பாஜக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து, தென்காசி நகர பாஜக தலைவா் சங்கரசுப்பிரமணியன், நகா்மன்ற உறுப்பினா் லெட்சுமணப் பெருமாள், பாஜக நிா்வாகி கருப்பசாமி ஆகியோா் நகராட்சி ஆணையரிடம் அளித்த மனு விவரம்:
தென்காசி நகராட்சிக்குள்பட்ட மின் மயானத்திற்கு இறுதிச் சடங்குகள் செய்யவரும் பொதுமக்கள் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா்.
பொதுமக்கள் நீராடுவதற்கு வசதியாக 5 புதிய நவீன குளியலறைகள் அமைக்க வேண்டும். மயான வளாகத்தில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி செய்து தர வேண்டும். இறுதிச் சடங்குகளை உரிய முறையில் மேற்கொள்வதற்கு மேற்கூரையுடன் கூடிய நன்மைக் கூடம், மயானப் பகுதி முழுவதும் போதுமான உயா் கோபுர மின்விளக்குகள் அமைத்து, தொடா்ச்சியான தூய்மைப் பணிகளை உறுதி செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







