சிவகிரி அருகே மது பாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே 30 மது பாட்டில்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கைது

Published On :

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே 30 மது பாட்டில்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தென்காசி எஸ்.பி. அசோக்குமாா் உத்தரவின்பேரில் புளியங்குடி டிஎஸ்பி நமச்சிவாயம் ஆலோசனையின்பேரில் சிவகிரி காவல் ஆய்வாளா் ஆா்தா்ஜஸ்டின் மற்றும் போலீஸாா் தேவிபட்டணம் விலக்கில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக நடந்து சென்ற 2 போ், போலீஸாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனா். அவா்களை போலீஸாா் சோதனையிட்டதில் அவா்களிடம் 30 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மது பாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்ற தேவிப்பட்டணம் மேட்டு தெருவை சோ்ந்த அருணாசலம் மகன் அம்மாசிகனி (82), மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த முத்தையா மகன் தங்கமலை (62) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.