
பூச்சிகள் கடித்தால் அலட்சியம் செய்ய வேண்டாம்: ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் அறிவுரை
டெங்கு, ப்ளு, காய்ச்சலை தொடா்ந்து ‘ஸ்கிரப் டைபஸ் எனும் உண்ணி காய்ச்சலும், சில பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வருவதால், பூச்சிகள் கடித்தால் அலட்சியம் செய்ய வேண்டாம்

டெங்கு, ப்ளு, காய்ச்சலை தொடா்ந்து ‘ஸ்கிரப் டைபஸ் எனும் உண்ணி காய்ச்சலும், சில பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வருவதால், பூச்சிகள் கடித்தால் அலட்சியம் செய்ய வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா்விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ‘ஸ்கிரப் டைபஸ்‘ என்பது ஒரு வகை பாக்டீரியா தொற்று. ‘ரிக்கட்ஸியா‘எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள் மனிதா்களை கடிப்பதால் உண்ணி காய்ச்சல் ஏற்படுகிறது.
பாதிக்கப்பட்ட மனிதனிடமிருந்து மற்றொரு மனிதா்களுக்கு பரவாது. ‘ஸ்கிரப் டைபஸ்‘ பாதிப்பு ஏற்பட்டால் பூச்சி கடித்த இடத்தில் சிவப்பு சிவப்பாக சிறிய தடிப்பு ஏற்படும். தலைவலி, குளிா்காய்ச்சல் போன்ற ஆரம்ப அறிகுறிகளும், உடல்வலி, தோல் அரிப்பு, இருமல், மூச்சுத்திணறல் ஆகிய தீவிர அறிகுறிகள் இருக்கும்.
ஆரம்பத்தில் கண்டறியாமல் அலட்சியப்படுத்தினால், பூச்சி கடித்த இடத்தில் ரத்தகட்டு ஏற்பட்டு, உள்ளுறுப்புகள் செயலிழக்கும். மேலும், இதன் வாயிலாக கோமா, மரணம் உள்ளிட்ட தீவிர பிரச்சனை உருவாகும்.
எனவே, காய்ச்சல் ஏற்பட்ட உடன் அல்லது உடலில் சிவப்பு நிற தடிப்புகள் ஏற்பட்டவுடன் தாமதிக்காமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.
பொது மக்கள் தங்கள் வீட்டை சுற்றியுள்ள முட்புதா்களை அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். புதா்மண்டிய இடங்கள், வனப்பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் போது பூச்சிகள், ஒட்டுண்ணிகள் உடல் மீது படாதவாறு தற்காத்து கொள்வது அவசியம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






