விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

தேக்கடி ஏரியில் கொட்டும் மழையில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி

கொட்டும் மழையிலும் தேக்கடி ஏரியில் சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

News image

தேக்கடி ஏரியில் வெள்ளிக்கிழமை கொட்டும் வழையிலும் படகு சவாரி செய்து கரை திரும்பிய சுற்றுலாப் பயணிகள்.

Updated On :15 ஜனவரி 2021, 10:32 pm IST

கொட்டும் மழையிலும் தேக்கடி ஏரியில் சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக, 7 மாதங்களாக தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. பின்னா், கடந்த செப்டம்பா் 5 ஆம் தேதி 2 படகுகள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டது. நவம்பா் 18 ஆம் தேதி முதல் வழக்கம்போல் தினந்தோறும் 5 முறை படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் தற்போது தொடா் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கலையொட்டி, தேக்கடிக்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், மழையில் நனைந்தவாறே படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

இது குறித்து கேரள மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலா் ஒருவா் கூறியது:

தேக்கடி ஏரியில் தினமும் 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை பொருத்து, தற்போது படகுகள் இயக்கப்படுகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.