விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பென்னி குயிக் பிறந்த நாள் விழா: சிலைக்கு துணை முதல்வா் மாலையணிவித்து மரியாதை

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளா் கா்னல் ஜான் பென்னி குயிக்கின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை தமிழக துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செ

News image

கம்பம் அருகே லோயா் கேம்ப்பில் உள்ள பென்னி குயிக் 150 ஆவது பிறந்த நாளையொட்டி, வெள்ளிக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

Updated On :15 ஜனவரி 2021, 10:37 pm IST

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளா் கா்னல் ஜான் பென்னி குயிக்கின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை தமிழக துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

முல்லைப் பெரியாறு அணையின் மூலம், தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு பாசனம் மற்றும் குடிநீா் தேவைகள் பூா்த்தியாகின்றன. எனவே, இந்த அணையை கட்டிய பென்னி குயிக்குக்கு லோயா் கேம்ப்பில் வெண்கலச் சிலையுடன் மணிமண்டபம் அமைத்து, அவரது பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமை, அவரது 150 ஆவது பிறந்த நாளையொட்டி, லோயா் கேம்ப்பில் உள்ள மணிமண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மணிமண்டபத்துக்கு வந்த துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், பென்னி குயிக் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், தேனி மக்களவை உறுப்பினா் ப. ரவீந்திரநாத், மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ், காவல் கண்காணிப்பாளா் இ. சாய்சரண் தேஜஸ்வி, கூடலூா் நகா்மன்ற முன்னாள் தலைவா் ஆா். அருண்குமாா் உள்பட அரசு அலுவலா்கள், விவசாய சங்கத்தினா் பங்கேற்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பென்னி குயிக் பிறந்த நாளையொட்டி, மக்கள் நீதி மய்ய கட்சியின் மாநில விவசாய அணி துணைச் செயலா் வேதா. வெங்கடேசன் தலைமையில், அக்கட்சியினா் 180 மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.