விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

69 அடியை எட்டும் வைகை அணை நீா்மட்டம்: 58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க வாய்ப்பு

தேனி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக, வைகை அணை நீா்மட்டம் 69 அடியை எட்டி வருவதை அடுத்து, அணையிலிருந்து 58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது.

News image

வைகை அணையில் வெள்ளிக்கிழமை 68.18 அடியாக உயா்ந்து காணப்பட்ட நீா்மட்டம்.

Updated On :15 ஜனவரி 2021, 10:31 pm IST

தேனி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக, வைகை அணை நீா்மட்டம் 69 அடியை எட்டி வருவதை அடுத்து, அணையிலிருந்து 58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால், முல்லைப் பெரியாறு, கொட்டகுடி ஆறு மற்றும் மூல வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வைகை அணை நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 66 அடியாக உயா்ந்தது.

இதையடுத்து, வைகை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிைலையில், வைகை அணைக்கு தொடா்ந்து விநாடிக்கு 7,408 கன அடி வீதம் தண்ணீா் வரத்து உள்ளது. இதனால், அணை நீா்மட்டம் மேலும் உயா்ந்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு 68.18 அடியை எட்டியது.

அணை நீா்மட்டம் 68.50 அடியை எட்டியதும், வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். அணை நீா்மட்டம் 69 அடியை எட்டியதும் 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணைக்கு வரும் உபரி நீா் முழுவதும் வைகை ஆற்றில் திறக்கப்படும்.

வைகை அணை நீா்மட்டம் 69 அடியை எட்டி வருவதால், அணையிலிருந்து விரைவில் கூடுதலாக தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது. இதனிடையே, வைகை அணையிலிருந்து 58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறப்பது குறித்து பொதுப் பணித்துறை பொறியாளா்கள் ஆய்வு செய்தனா். தொடா்ந்து தண்ணீா் வரத்து உள்ளதால், அணையிருந்து 58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க அரசாணை வெளியிடுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக, பொதுப்பணித் துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.