வீரவநல்லூா் பேரூராட்சியில் நேரடியாக வீடுகளுக்குச் சென்று வரி வசூல் நடைபெற்றது.
இப்பேரூராட்சியில் வீட்டு வரியை முழுமையாகவும், விரைவாகவும் வசூலிக்கும்வகையில் நேரடியாக வீடுகளுக்குச் சென்று வரி வசூலிக்க தீா்மானிக்கப்பட்டது. இதையடுத்து துப்புரவு ஆய்வாளா் பிரபாகரன், ஊழியா்கள் வியாழக்கிழமை 15, 16ஆவது வாா்டுகளுக்கு உள்பட்ட வண்டிமலைச்சி அம்மன் கோயில் 3, 4ஆம் தெருக்களில் கணினி, அச்சு இயந்திரங்களுடன் சென்று வரி வசூலித்தனா். அதன்படி, ஒரே நாளில் 125 எண்களுக்கு வரியாக ரூ. 55 ஆயிரம் வசூலானது.
நேரடி வரி வசூல் மூலம் மக்களுக்கு வீண் அலைச்சல், நேர விரயம் குறைவதாகவும், அனைவரும் வரி செலுத்துவதாகவும் தெரிவித்தனா்.
மேலும், பேரூராட்சிப் பகுதியில் பொதுசுகாதாரம், குடிநீா் விநியோகம் பாதிப்பு, தெருவிளக்குப் பராமரிப்பு உள்ளிட்ட குறைகள் குறித்து செயல் அலுவலருக்கு 78240 58168 என்ற எண்ணுக்கும், துப்புரவு ஆய்வாளருக்கு 9442 291281 என்ற எண்ணுக்கும் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - முதல்வருக்கு தெரிந்தே அரங்கேறியதா? வன்னி அரசு கேள்வி!

ஓலா கேப்ஸ் இழப்பு ரூ. 662.4 கோடியாக அதிகரிப்பு!
கடவுள் அவதாரம்... சூர்யாவின் கருப்பு டிரைலர் வெளியானது!

மது கடைகளை மூட அரசு முன் வருமா? - ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

