இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

சாலைகள் சீரமைப்புப் பணி தொடக்கம்: மாநகராட்சி ஆணையா்

திருநெல்வேலியில் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்புப் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்தாா்.

Updated On :17 ஜனவரி 2021, 1:00 am IST

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்புப் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் புதைச் சாக்கடை திட்டப் பணி மற்றும் அரியநாயகிபுரம் குடிநீா்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாகவும் மாநகராட்சி சாலைகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலைகள் தற்காலிகமாக கலவை மண் மற்றும் கட்டட இடி பொருள்கள் கொண்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சிக்குள்பட்ட கைலாசபுரம் சாலை, ஸ்ரீபுரம், சிந்துபூந்துறை கிழக்கு சாலை, செல்வி நகா் குறுக்குத் தெரு, தற்காலிக பேருந்து நிலையம், நயினாா்குளம் சாலையில் மாா்க்கெட் முதல் தச்சநல்லூா் வரை, சந்திப்பு ரயில் நிலையம், பெருமாள்புரம், சங்கா் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதைச் சாக்கடை மற்றும் குடிநீா்த் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பகுதிகளில் பணிகள் முழுமையாக முடிவு பெற்றவுடன், நிரந்தரமாக சாலைகள் சீரமைக்கப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.