முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காவல்துறையைக் கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரை அடுத்த வெங்கலில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை

Updated On :2 மே 2013, 12:27 pm IST

திருவள்ளூரை அடுத்த வெங்கலில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்து அக்கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில்

ஈடுபட்டனர்.

 திருவள்ளூரை அடுத்த வெங்கல் பகுதியில் கடந்த மாதம் 24-ம் தேதி பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர், கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.அப்போது போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து, பா.ஜ.க.வினர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஜே.லோகநாதன் தலைமை வகித்தார்.எல்லாபுரம் ஒன்றியத் தலைவர் ஏ.கே.மூர்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, அக்கட்சியின் மாநில அரசு தொடர்புச் செயலாளர் பாஸ்கர், மாநில விவசாய அணித் தலைவர் மலையன் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.

எல்லாபுரம் ஒன்றியச் செயலாளர் பாபு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.