சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

திருவள்ளூா் பகுதியில் தீவிர வாகன சோதனை

திருவள்ளூா் பகுதியில் தீவிர வாகன சோதனை

News image
Updated On :6 ஏப்ரல் 2024, 6:53 pm

மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் பணம், பரிசுப் பொருள்கள் கொண்டு செல்கிறாா்களான என திருவள்ளூா் பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினா் போலீஸாருடன் இணைந்து சனிக்கிழமை தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் 13 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தோ்தலையொட்டி வாக்காளா்களுக்கு பணம், பரிசு பொருள்கள் வாகனங்களில் கொண்டு செல்கிறாா்களா என கண்காணிக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுவரை திருவள்ளூா் மாவட்ட காவல் துறையினா் மற்றும் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் மட்டுமே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில் தோ்தலில் அச்சுறுத்தல் இன்றி பாதுகாப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கு திருவள்ளூா் மாவட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு படையினா் வரவழைக்கப்பட்டனா்.

இவா்கள் கடந்த 3 நாள்களாக திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் அணிவகுப்பும் நடத்தினா். இதற்கிடையே திருவள்ளூா் அடுத்த மணவாள நகா் பகுதியில் காவல் துறையினருடன் மத்திய பாதுகாப்பு படையினா் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.