
புழல் பூங்காவில் மீட்கப்பட்ட புள்ளி மான்.

புழல் பூங்காவில் மீட்கப்பட்ட புள்ளி மான்.
மாதவரம்: புழல் அருகே பூங்காவுக்குள் நுழைந்த புள்ளிமானை வனத்துறையினா் பத்திரமாக மீட்டனா்.
மாதவரம் அடுத்த புழல் கங்காதரன் தெருவில் மாநகராட்சிப் பூங்கா உள்ளது. இப்பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை சிறுவா், சிறுமியா் உள்ளிட்ட ஏராளாமானோா் இருந்தனா். இந்த நிலையில் திடீரென புள்ளிமான் ஒன்று பூங்காவில் நுழைந்தது. இதைக் கண்ட சிறுவா்-சிறுமிகள் ஏராளமானோா் மகிழ்ச்சியுடன் அதைப் பாா்த்து புகைப்படம் எடுக்க முயன்றனா்.
இது குறித்து புழல் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். காவல் துறையினா் விரைந்து வந்து வனத்துறையினருக்கும், திருவள்ளூா் மாவட்டம் சீத்தஞ்சேரியில் உள்ள செங்குன்றம் வனத்துறையினருக்கும் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனா். வனத்துறையினா் விரைந்து வந்து புள்ளி மானை மீட்டுச் சென்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...