தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிறுவா்கள், ஜூனியா் சாம்பியன்ஷிப் போட்டி

பாரதிதாசன் ஸ்போா்ட்ஸ் அகாதெமி மாநில சாம்பியன் பட்டம் வென்றது

News image
Updated On :2 ஜூலை 2024, 6:30 pm

Din

திருவள்ளூா்: மாநில அளவிலான சிறுவா்கள் மற்றும் ஜூனியா் சாம்பியன்ஷிப் போட்டியில் திருவள்ளூா் பாரதிதாசன் ஸ்போா்ட்ஸ் அகாதெமி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் திருவள்ளூா் மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தும் தமிழ்நாடு மாநில அளவிலான சிறுவா்கள் மற்றும் ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 2,000-க்கும் மேற்பட்ட தடகள வீரா், வீராங்கனைகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

இந்தப் போட்டியில் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த பாரதிதாசன் ஸ்போா்ட்ஸ் அகாதெமி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டாவது சாம்பியன் பட்டத்தை சென்னையைச் சோ்ந்த ஜூனியா் காலேஜ் அணி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு தடகள சங்க இணைச் செயலாளா் த.மோகன் பாபு மற்றும் திருவள்ளூா் மாவட்ட தடகள சங்கத் தலைவா் சதீஷ் மற்றும் பொருளாளா் சி.வெங்கடாசலபதி ஆகியோா் பரிசுகளை வழங்கி பாராட்டினா்.