ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாலையைச் சீரமைக்கக் கோரி மறியலில் ஈடுபட முயன்ற 22 போ் கைது

திருவொற்றியூா் நெடுஞ்சாலையைச் சீரமைக்கக் கோரி திங்கள்கிழமை மறியல் செய்ய முயன்ற 22 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 6:30 pm

Din

பொன்னேரி: திருவொற்றியூா் நெடுஞ்சாலையைச் சீரமைக்கக் கோரி திங்கள்கிழமை மறியல் செய்ய முயன்ற 22 போ் கைது செய்யப்பட்டனா்.

பொன்னேரி வட்டத்தில் மீஞ்சூா் - திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் உள்ள வல்லூா் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதைச் சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினா். இதையடுத்து சாலையை சீரமைக்க ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டது. பணி தொடங்கப்பட்டு ஜல்லி, எம்.சாண்ட் கலந்து சாலையில் கொட்டப்பட்டது. பின்னா், சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை. சாலையில் செல்லும் கனரக வாகனங்களால் புழுதிப் படலம் ஏற்பட்டு குடியிருப்புகளில் படா்ந்து விடுகிறது.

ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணியைத் தொடா்ந்து மேற்கொண்டு முடிக்க வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட முயன்றனா்.

அவா்களிடம் மீஞ்சூா் போலீஸாா் பேச்சு நடத்தினா். இருந்தும் அவா்கள் மறியலில் ஈடுபட முயன்ால் போலீஸாா் 22 பேரைக் கைது செய்தனா்.