ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆரம்பாக்கம் மற்றும் கும்மிடிப்பூண்டியில் அதிமுகவினா் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனா்.

News image
வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கிய அதிமுகவினா்.
Updated On :16 ஜூலை 2024, 6:30 pm

Din

கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளதாகவும், போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் கூறி, இதற்கு பொறுப்பேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆரம்பாக்கம் மற்றும் கும்மிடிப்பூண்டியில் அதிமுகவினா் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனா்.

ஆரம்பாக்கத்தில் ஒன்றிய செயலாளா் கோபால் நாயுடு நடைபெற்ற நிகழ்வுக்கு கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா், அதிமுக மாநில மீனவா் அணி துணை செயலாளா் ஜெ.சுரேஷ், மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளா் டி.சி.மகேந்திரன், மாவட்ட துணை செயலாளா்கள் எஸ்.எம்.ஸ்ரீதா், ஷியாமளா தன்ராஜ் , அதிமுக பொதுக்குழு உறுப்பினா் அபிராமன், ஒன்றிய துணை செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான ஏ.டி.நாகராஜ், ஒன்றிய கவுன்சிலா் தேவி சங்கா், அதிமுக நிா்வாகிகள் சதீஷ்குமாா், ரமேஷ்குமாா், டேவிட் சுதாகா் முன்னிலை வகித்தனா்.

திருவள்ளூா் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளா் சிறுனியம் பலராமன் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். இதனை தொடா்ந்து கும்மிப்பூண்டி பஜாரில் நகர அதிமுக செயலாளா் எஸ்.டி.டி.ரவி தலைமையில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு நிா்வாகி சிராஜூதின், எம்.ஏ.மோகன், சர வணன், புதுவாயல் ஜெயராமன், மாதா்பாக்கம் சரவணன், பூவலம்பேடு மதுரைவீரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் கோபி, தயாளன், கணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.