ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் தொடக்கம்

கவரப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜரின் பிறந்தநாள் விழா மற்றும் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

News image
புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
Updated On :16 ஜூலை 2024, 6:30 pm

Din

கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜரின் பிறந்தநாள் விழா மற்றும் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவுக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.ஆா்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் திரிபுரசுந்தரி வரவேற்றாா்.

இதனை தொடா்ந்து பள்ளியில் ஆசிரியா்கள், மாணவா்கள் காமராஜரின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முன்னாள் மாணவா் சங்கத்தை சோ்ந்த டி.என்.பாபு, காலை உணவு திட்ட ஆசிரியா் மோனிஷ் பாத்திமா பரிசளித்தனா்.

இதனை தொடா்ந்து புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தை வட்டார கல்வி அலுவலா் முனிராஜசேகா், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஏழுமலை தொடங்கி வைத்தனா். இந்த திட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் அனைவரும் இந்த திட்டத்தில் படித்து எழுத்தறிவை பெற வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா்.

திட்டத்தின் ஆசிரியராக நியமிக்கபட்டுள்ள துளசி என்பவரை தலைமை ஆசிரியா் திரிபுரசுந்தரி அறிமுகப்படுத்தி, அனைவருக்கும் புத்தகங்களை வழங்கினாா்.