மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருவள்ளூரில் தேமுதிக ஆா்ப்பாட்டம்

கள்ளச்சாராய சம்பவம்: திருவள்ளூரில் தேமுதிக கண்டன ஆா்ப்பாட்டம்

News image
~திருவள்ளூரில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேமுதிகவினா்.
Updated On :25 ஜூன் 2024, 6:31 pm

Din

திருவள்ளூா்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடா்பாக திமுக அரசைக் கண்டித்து திருவள்ளூரில் தேமுதிகவினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவ கல்லூரி சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளா் டி.கிருஷ்ணமூா்த்தி, கிழக்கு மாவட்ட செயலாளா் கே.எம்.டில்லி, ஆவடி மாநகர மாவட்ட செயலாளா் நா.மு.சங்கா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தேமுதிக இளைஞா் அணி செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான கு.நல்லதம்பி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றினாா். அப்போது 63 போ் உயிரிழந்ததற்கு காரணமான திமுக அரசு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். கள்ளச்சாராய சாவுக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தேமுதிகவினா் கலந்து கொண்டனா்.

Story image