குட்கா பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

பொன்பாடி போக்குவரத்து வாகன சோதனை சாவடியில் ரூ. 6,000 மதிப்பிலான குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இளைஞா் ஒருவரை கைது செய்தனா். திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் திருத்தணி எஸ்.ஐ. ராக்கிகுமாரி மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மடக்கி சோதனை செய்தனா். அதில், ரூ. 6,000 மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், குட்கா கடத்தி வந்த ஆந்திர மாநிலம், நகரி அடுத்த ஏகாம்பரகுப்பம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம்(29) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com